000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a நரசிம்மர் |
300 | : | _ _ |a வைணவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a பிரகலாதனுக்காக இரண்யனை வதைக்க தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மர் இரண்யனோடு பொருதும் காட்சி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a இரண்யனை வதைக்க கோபாவேசத்துடன் காட்சியளிக்கும் நரசிம்மமூர்த்தி எட்டுத் திருக்கைகளுடன் விளங்குகிறார். சிம்ம முகங்கொண்டு கிரீட மகுடந்தரித்து, எண் கைகளில் சங்கு, சக்கரம், எச்சரிக்கும் முத்திரை, ஓங்கிய கை, என பலப்படியான முத்திரைகளைக் காட்டியுள்ளார். இடது கைகளுள் ஒன்றில் இரண்யனை இறுகப் பிடித்துள்ளார். வலது கைகளில் ஒன்று ஒருவரின் கழுத்தை தன் கூரிய நகங்களால் குத்திக் கிழிக்கிறது. அவர் யாரென்று அறியக் கூடவில்லை. நரசிம்மர் இடது காலை பீடத்தின் மேல் ஊன்றி, வலது காலை கீழே வைத்துள்ளார். அரையாடை அணிந்துள்ள சிங்கமுகனார் இடைக்கட்டு முடிச்சு வலதுபுறம் பறந்த நிலையில் உள்ளது. முப்புரிநூல் சிம்மத்தாரின் அசைவுக்கேற்றவாறு சுழன்றுள்ளது. கடகவளை முன் வளை கைகளில் காட்டப்பட்டுள்ளன. கழுத்தில் கண்டிகை, சவடி அணியப்பட்டுள்ளது. கால்களில் வீரக்கழல் உள்ளது. நரசிம்மரின் இடது கைப்பிடிக்குள் சிக்கியுள்ள இரண்யன் யானை உரித்த தேவரின் பாணியில் நிற்கின்றான். அரையாடை அணிந்துள்ள வீரன் இரண்யனின் நீண்ட அலங்கரிக்கப்பட்ட மகுடம் தரித்துள்ளான்.காதுகளில் அணிகள் உள்ளன.இடமார்பின் வழி முப்புரிநூல் செல்கிறது. இடையாடையின் முடிச்சு இடது தொடையில் உள்ளது. |
653 | : | _ _ |a நரசிம்மர், சிங்கமுகனார், இரண்யவதம், நரசிங்கமூர்த்தி, இராஜசிம்மவர்மப் பல்லவன், இராஜசிம்மேஸ்வரம், இராஜசிம்மன் கற்றளி, காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், கைலாசநாதர் கோயில் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84226806 |
915 | : | _ _ |a 79.6897132 |
995 | : | _ _ |a TVA_SCL_000055 |
barcode | : | TVA_SCL_000055 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |